தூத்துக்குடியில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி தொடக்கம் …!

- Advertisement -

0

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. இப்போட்டிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிவகங்கையில் இன்று தொடங்கி வைத்தார்.அதனைத் தொடர்ந்து தூத்துக்குடியில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் துவக்க விழா தருவை மைதானத்தில் நடைபெற்றது.

- Advertisement -

விழாவில், மாவட்ட கலெக்டர் இளம் பகவத் தலைமை வகித்து போட்டிகளை துவக்கிவைத்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தார். பின்னர் கூடைப்பந்து, கைப்பந்து உள்ளிட்ட போட்டிகளை துவக்கி வைத்து வீரர், வீராங்கனைகளுடன் மாவட்ட கலெக்டர், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்துரையாடினர்.நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாவட்ட விளையாட்டு அதிகாரி அந்தோணி அதிர்ஷ்டராஜ் மற்றும் விளையாட்டு பயிற்றுநர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.