நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி, கடந்த 22-ம் தேதி பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழக கொடியை நடிகர் விஜய் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து தற்போது மாநாட்டுக்கான பணிகளை விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த அனுமதி கேட்டு புஸ்ஸி ஆனந்த், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேற்று அனுமதி கேட்டு மனு அளித்துள்ளார்.கட்சியின் முதல் மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் உள்பட பல்வேறு விஷயங்களை நடிகர் விஜய் தொண்டர்கள் மத்தியில் பேசவிருக்கிறார்.
இந்நிலையில், நடிகர் விஜய் 2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக வர வேண்டி சென்னையில் இருந்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பாதையாத்திரையாக சுமார் 350 கி.மீ. தூரம் கையில் கட்சிக்கொடியை ஏந்தியபடி, வேளாங்கண்ணி மாதா பேராலயத்திற்கு சென்றடைந்தனர். இந்நிலையில் வேளாங்கண்ணியில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு நடிகர் விஜய் முதல்வராக வர வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.