திருச்சி துவாக்குடி அருகே உள்ள திருநெடுங்களநாதர் ஆலயத்தில் ஆவணி மாதம் வளர்பிறை அஷ்டமிய முன்னிட்டு நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க அனைத்து மக்கள் நோயின்றி வாழ தருமை ஆதீனம் திருச்சி மலைக்கோட்டை மெளனமடம் முனைவர் ஸ்ரீ ல ஸ்ரீ திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள் ஆலயத்தில் சிறப்பு தரிசனம் செய்தார்
திருநெடுங்களநாதர் திருக்கோயிலில் உள்ள விநாயகர், முருகன் வள்ளி தெய்வானை மற்றும் திருநெடுங்களநாதர் மங்களாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாரணை காண்பிக்கப்பட்டது. அஷ்ட பூஷ்ப அர்ச்சனை செய்து பூர்ண கும்ப மரியாதை உடன் சுவாமிகளை வரவேற்றனர். திருக்கோவிலில் உள்ள அனைத்து சுவாமிகளை தரிசனம் செய்த பின்பு கோயிலில் உள்ள அர்ச்சகர் மூலம் பிரசாதம் வழங்கப்பட்டது .திருக்கோவிலில்க்கு வந்த அனைத்து பக்தர்களுக்கும் ஸ்வாமிகளால் திருநீர் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.