சிறுகமணி கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில் தென்னை காய்கள் மற்றும் காய்ந்த ஓலைகள் ஏலம்!

- Advertisement -

0

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் திருச்சி மாவட்டம் சிறுகமணி கரும்பு ஆராய்ச்சி நிலையத்துக்கு சொந்தமான சுமார் 400 தென்னை மரங்களில் இருந்து முற்றிய காய்கள் மற்றும் காய்ந்த தென்னை ஓலைகள் ஓராண்டு காலத்திற்கு குத்தகைக்கு விடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கு கொள்ள விருப்பம் உள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விலைப்புள்ளி படிவம் 27.11.2024 அன்று காலை 10.30 மணிக்குள் கரும்பு ஆராய்ச்சி நிலைய அலுவலகத்தை வந்து சேர வேண்டும். விலைப்புள்ளி படிவத்தை ரூ.25/- செலுத்தி கரும்பு ஆராய்ச்சி நிலைய அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

- Advertisement -

ஏலத்தில் பங்கு கொள்ளும் ஏலதாரர்கள் காப்பு தொகையாக ரூ.1000/- முன்பணமாக செலுத்த வேண்டும்.ஏலதாரர்கள் தென்னை மரங்களை அலுவலக நாட்களில் அலுவலக நேரங்களில் மட்டுமே பார்வையிட அனுமதிக்கப்படுவர்.அதிகத் தொகைக்கு ஏலம் எடுத்தவர் முழு ஏலத் தொகையையும், ஏலத் தேதியன்றே செலுத்தி விட வேண்டும்.ஏலதாரர் ஒரு வருட காலத்தில் 6 அறுவடைகளையே மேற்கொள்ள வேண்டும்.ஏலம் எடுப்பவர் தங்கள் சொந்த செலவிலேயே பாதுகாப்பு ஏற்பாடு களை செய்து கொள்ள வேண்டும். அலுவலக நாட்களில் அலுவலக வேலை நேரத்தில் மட்டுமே தேங்காய் அறுவடை செய்யப்பட வேண்டும்.பங்கு கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 9171717832, 9442657405, 9597395889 என்ற எண்ணை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளவும். இத்தகவல்களை சிறுகமணி கரும்பு ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.