திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியின் சமூகப் பணித்துறை மற்றும் மேரி ரிச்மண்ட் கிளப் இணைந்து கை அச்சு மற்றும் கையெழுத்து பிரசாரம் என்ற நிகழ்ச்சியை உலக மன நல தினமான நேற்று கல்லூரி வளாகத்தில் நடத்தியது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலர் கோ.மீனா தலைமை தாங்கினார். கல்லூரியின் தலைமை செயல் அதிகாரி கு.சந்திரசேகரன் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் இயக்குனர் எஸ்.அபர்ணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மனதை மகிழ்ச்சியோடு வைத்திருப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக கை அச்சு மற்றும் கையெழுத்தினை முதலில் பதித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து கல்லூரின் முதல்வர் கெஜலட்சுமி மற்றும் அனைத்துத் துறை தலைவர்களும் கை அச்சு மற்றும் கையெழுத்தினை பதித்தனர். மேலும் சமூக பணித்துறை மாணவிகள், பிற துறை மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் ஆகிய அனைவரும் தங்களது கை அச்சு மற்றும் கையெழுத்தினைப் பதித்து உலக மனநல தினத்தை கொண்டாடினர்.