ஆரம்பம் சரியாகத்தான் இருக்கு அடுத்தது இனி போகப்போக தெரியும் என விஜய் மாநாடு குறித்து சீமான் கருத்து..!
மதுரை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது,தவெக மாநாட்டிற்காக, தமிழ் மன்னர்களுக்கு கட்-அவுட் வைத்துள் ளதை வரவேற்கிறேன். அதையெல்லாம் அகற்றும்படி கூறினால், மராட்டிய மன்னர்கள் படங்களையா வைக்க முடியும்? பெருமைமிகு முன்னோர்கள், அரசியல் தலைவர்கள் நமக்கு இருக்கிறார்கள் என்பதை இது உணர்த்துகிறது. விஜய்யின் தொடக்கம் சரியாகத்தான் இருக்கிறது. போகப்போகத்தான் அடுத்தது என்ன வென்று தெரியும். நான் சேர, சோழ, பாண்டியர் பரம்பரையில் வந்தவன். சுபாஷ் சந்திர போசுக்கு இங்கே சிலைகள் உள்ளன. அதை கொண்டு வந்தவர் எங்கள் தாத்தா பசும்பொன் முத்துராமலிங்க தேவர். ஆனால், மேற்கு வங்கத்திலோ, வட இந்தியாவிலோ அவருக்கு சிலைகள் இருக்கிறதா சொல்லுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.