நாம் தமிழர் பிரிவினைவாத கட்சி” கூறிய எஸ் பி வருண்குமார் பரபரப்பு குற்றச்சாட்டுக்கு சீமான் ஆவேசமான பதில்!(வீடியோ இணைப்பு)

- Advertisement -

0

ஐந்தாவது தேசிய ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு சண்டிகர் மாநிலத்தில் நடைபெற்றது. மாநாட்டில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பணியாற்றி வரும் இளம் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அழைப்பு விடப்பட்டு கலந்து கொண்டனர். மத்திய உள்துறை அமைச்சகத்தின் அழைப்பின் பேரில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் இணையதள குற்றங்களை கண்காணிப்பது, தடுப்பது குறித்து விரிவான விளக்கத்தை அனைத்து ஐபிஎஸ் அதிகாரிகள் மத்தியில் திருச்சி எஸ்.பி.வருண்குமார் ஆதாரங்களோடு பேசினார்.

அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியினர், உலகில் எங்கிருந்தும், இணையதளங்கள் வாயிலாக பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். நாம் தமிழர் இயக்கம் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவு இயக்கம். குற்றச்செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்ட நாம் தமிழர் இயக்க நிர்வாகிகள் மீது, சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்காக, என்னையும் ஐ.பி.எஸ்., அதிகாரியான என் மனைவி மற்றும் குழந்தைகளை ஆபாசமாக சித்தரித்து எக்ஸ், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இவையனைத்தையும் வெளிநாடுகளில் இருப்போரை வைத்து செய்துள்ளனர். இதுகுறித்து முறையாக புகார் அளிக்கப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த விஷயத்தில் நியாயத்தின் பக்கம் இருப்போம் என்று சொல்லி, உயர் அதிகாரிகளும், தமிழக அரசும் எனக்கு ஆதரவு அளித்தது. ஆனால், யார் செய்தது என்ற விபரம் கேட்டு, சமூக வலைதள அலுவலகங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. மூன்று மாதமாகியும் இன்னும் அந்த விபரங்கள் கிடைக்கவில்லை. அதேபோல, என் குடும்பத்தாரை ஆபாசமாக சித்தரித்து வெளியிடப்பட்ட படங்கள் சமூக வலைதளங்களில் இன்றைக்கும் உள்ளன. நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உலகம் முழுதும் உள்ளனர். பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் அவ்வியக்கத்தைச் சேர்ந்தோரையும், இதுபோன்ற இயக்கங்களையும் சைபர் கிரைம் புலனாய்வில் உயரிய அமைப்பான ஐபோர்சி தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.” என்று கூறினார்.

இந்நிலையில், சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்  கூறியதாவது:-இந்திய அரசியலமைப்பின் படி 13 ஆண்டுகளாக இயக்கம் நடத்துகிறோம்; தேர்தலில் நின்று 3 ஆவது கட்சியாக உருவெடுத்துள்ளோம். தனித்து நின்று அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கான அந்தஸ்தை பெற்றுள்ளோம். நாம் தமிழர் கட்சி பிரிவினைவாத இயக்கம்,அதை கண்காணிக்க வேண்டும் என்று எதை வைத்து திருச்சி எஸ்.பி. வருண் குமார் கூறுகிறார். ஏற்கனவே என்.ஐ.ஏ. சோதனை நடத்தியது; அவர்களுக்கு தெரியாத நாங்கள் பிரிவினைவாத இயக்கமா இல்லை என்று.ஒரு அடிப்படை தகுதி கூட இல்லாமல்  எஸ்.பி. வருண் குமார் எப்படி ஐ.பி.எஸ். அதிகாரி ஆனார். ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமாருடன் மோதத் தயார்; மோதுவோம் வா. என் கட்சியை குறைசொல்வதற்காகத்தான் ஐ.பி.எஸ். ஆகியிருக்கிறாரா வருண்குமார்?. அவரால் எங்களை என்ன பண்ண முடியும் என்று ஆவேசமாக கூறினார்.

 

Leave A Reply

Your email address will not be published.