குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் இயக்கம் அழைப்பு!

- Advertisement -

0
ஆய்வு மனப்பான்மையை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற உள்ள குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்குமாறு பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அறிவியல்  இயக்கத்தின் மாவட்டத் தலைவர் ஜான்சன் பிரான்சிஸ், செயலாளர் மு.மணிகண்டன், பொருளாளர் இரா.சீத்தா, குழந்தைகள் அறிவியல் மாநாட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர்.மு.அ.ரிபாயத் அலி, து.காந்தி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

- Advertisement -

பள்ளி செல்லும் மாணவர்கள் மத்தியில் அறிவியல் கண்ணோட்டத்தை வளர்க்கவும், ஆய்வு மனப்பான்மையை மேம்படுத்தவும் கடந்த 32 ஆண்டுகளாக குழந்தைகள் அறிவியல் மாநாட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ‘நீடித்த பாதுகாப்பான நீர் மேலாண்மை’ என்ற கருப்பொருளின் கீழ் குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற உள்ளது.11 வயது முதல் 17 வயது வரை உள்ள பள்ளி மாணவர்கள் 2 பேர் குழுவாக சேர்ந்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். பள்ளி ஆசிரியர் அல்லது கல்லூரி மாணவர் ஒருவரின் வழிகாட்டுதலில் நீர் சூழலும் பாதுகாப்பும், நீர் சார்ந்த பொது சுகாதாரமும் மருத்துவமும், நீர் சார்ந்த நோய்கள், நீர் அனைவருக்குமானது, நீர் பாதுகாப்புக்கான பாரம்பரிய மற்றும் நவீன தொழில்நுட்ப யுத்திகள் ஆகிய உப தலைப்புக்களில் ஏதேனும் ஒன்றின் கீழ் ஆய்வு செய்ய வேண்டும்.

தாங்கள் வாழும் பகுதி, தாங்கள் படிக்கும் பள்ளி உள்ளிட்ட ஏதேனும் ஏதேனும் ஓர் இடத்தை ஆய்வுக் களமாக தேர்வு செய்து, ஆய்வுகளை அறிவியல் வழிமுறைப்படி செய்து பார்க்க வேண்டும். தங்கள் ஆய்வு அனுபவங்களை தொகுத்து ஆய்வுக் கட்டுரை தயாரிக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள மாவட்ட குழந்தைகள் அறிவியல் மாநாடுகளில் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு விஞ்ஞானிகள், பேராசிரியர்கள் முன்னிலையில் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க வேண்டும்.சிறந்த ஆய்வுக் கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு, மண்டல மற்றும் மாநில குழந்தைகள் அறிவியல் மாநாடுகளில் பங்கேற்று அறிஞர்கள் முன்னிலையில் அறிவியல் ஆய்வுரை நிகழ்த்த வாய்ப்பு அளிக்கப்படும். குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்கும் அனைத்து இளம் விஞ்ஞானிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். மாநிலம் தழுவிய இந்த குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க விரும்பும் இளம் விஞ்ஞானிகள், வழிகாட்டியாக பங்கேற்க விரும்பும் ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவர் உடனே கீழ்க்கண்ட எண்களை 9443750155, 7845729890, 9787866135 உடனடியாக தொடர்பு கொள்ளலாம்.

Leave A Reply

Your email address will not be published.