திருச்சி மாநகர் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும். மோட்டார் வாகன தொழிலாளர்கள் மீது கொடூரமான வழக்குகளை பதிவு செய்யக் கூடாது. டோல்கேட் கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும். ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களை கட்டுப்படுத்தும் அடிப்படையில் அக்ரிகேட்டர் விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.கால்டாக்சி, ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும். விபத்து வழக்கில் ஓட்டுனருக்கு சொந்த ஜாமின் வழங்க வேண்டும். வாரிய பதிவை எளிமையாக்கி பணப்பலன்களை இரட்டிப்பாக்கி பொங்கல் பண்டிகைக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும். நெடுஞ்சாலை, விமான நிலையங்களில் ஓட்டுநர்களுக்கு பார்க்கிங், ஓய்வு அறை வசதி செய்து தரவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியூ மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், மாவட்ட தலைவர் சீனிவாசன், சங்க மாவட்ட செயலாளர் சந்திரன், மாவட்ட பொருளாளர் அந்தோணி சுரேஷ் மாவட்ட துணைச் செயலாளர்கள் பீர்முகமது, சுப்பிரமணி, மாவட்ட துணைத் தலைவர்கள் வருசை முகமது, ஜோசப், ராஜ்குமார் ஆகியோர் பேசினர். சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.