திருவெறும்பூர் அருகே வட்டாட்சியர், அதிகாரிகளை உள்ளே வரவிடாமல் தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்..!
திருவெறும்பூர் அருகே உள்ள எலந்தப்பட்டி கிராம பஞ்சாயத்து காந்தளூர் கிராமத்தில் 25 ஏக்கர் கல்லாங்குத்து புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக தாலுகா வட்டாட்சியர் தலைமையில் வருவாய் அலுவலர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் இன்று காலை ஆக்கிரமிப்புகளை பகுதிக்கு சென்றனர்.அப்போது வருவாய் மற்றும் காவல் வாகனங்களை உள்ளே செல்ல விடாமல் சாலையில் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் காந்தளூர் மாதா கோயில் தெரு பின்புறம் உள்ள சாலை வரை மறித்து அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அவ்விடத்திலேயே பேச்சு வார்த்தை நடத்தியதில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை நேரில் சந்தித்து மனு கொடுத்தும், இது சம்பந்தமாக அமைதிப் பேச்சு வார்த்தை நடத்திய பின்பும் ஆக்கிரமிப்புகளை அகற்றலாம் என்று முடிவு எடுக்கப்பட்டதால் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.