இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் நெஞ்சு வலி காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளார்.அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக சக்திகாந்த தாஸ் உள்ளார். இவரது பதவிக்காலம் சமீபத்தில் தான் நீட்டிக்கப்பட்டது.இவர் இந்திய ரிசர்வ் வங்கியின் 25-வது கவர்னராக உள்ளார். இவர் இதற்கு முன்னர் இந்தியாவின் பதினைந்தாம் நிதி ஆணையத்தின் உறுப்பினராகவும், ஜி 20 இந்தியப் பிரதிநிதியாகவும் இருந்துள்ளார்.