திருச்சி வெஸ்டிரி பள்ளி மைதானத்தில் நடந்து வரும் புத்தக கண்காட்சி திருவிழா ஆறாம் நாள் விழாவில் புனித சிலுவைக் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பறவைகள் பலவிதம் என்ற தலைப்பில் பறவைகள் மற்றும் பாறை ஓவிய ஆராய்ச்சியாளர் பாலா பாரதி உரையாற்றினார். தமிழ்ச்செம்மல் நாவை. சிவம், தமிழ் மணவாளன், புலவர் க. முருகேசன் ஆகியோரை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது. பெண்களின் முன்னேற்றத்திற்கு பெரும் தடை வீடா?? நாடா?? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. நடுவர் கவிஞர் நந்தலாலா, வீடே என்ற தலைப்பில் பேரா. இந்திரா ஜெயச்சந்திரன்,மணவை லலிதா ஆகியோர் உரையாற்றினார்கள்.நாடே என்ற தலைப்பில் பேரா. சாத்தம்மைப்பிரியா மற்றும் கவிஞர் அன்ன லெட்சுமி உரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட வாசகர் வட்டம் தலைவர், கவிஞர் வீ. கோவிந்தசாமி, அரசு அதிகாரிகள், திருச்சி மாவட்ட நூலக அலுவலர் சிவகுமார், இலால்குடி எழில் செல்வன், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், திருச்சி மாவட்ட வாசகர் வட்டம் நிர்வாகிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், சான்றோர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.