திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் மாமன்ற கூட்டம் இன்று (30.08.2024) காலை 10 மணிக்கு மாநகராட்சி காமராஜ் மன்றம் லூர்துசாமி மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதிகளின் குறைபாடுகளை தெரிவித்தனர். மாமன்ற கூட்டத்தில் 39 வது மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் கூறுகையில், பாலக்கரையில் அமைந்துள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் சிலையினை வருகின்ற அக்டோபர் 1 ம் தேதி அன்று திறப்புவிழா காண வழிவகை செய்யவேண்டும் என்றும்,பாதாள சாக்கடை பணி முடியும் தருவாயில் உள்ளதால் இந்தாண்டு இறுதிக்குள் முழுமையான செயல்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை வைக்கப்பட்டது.