தமிழகத்தில் மானிய விலையில் உணவு பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களாக துவரம் பருப்பு, பாமாயில் இவைகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயில் ஆகிய ரேஷன் பொருட்களை செப்டம்பர் 5ம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. இதுவரை துவரம் பருப்பு, பாமாயில் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் முழுமையாக பயன்பெறும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ரேசன் அட்டைதாரர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.