கடந்த 2023 ஆம் ஆண்டு திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் 2023 மழை வெள்ளத்தின்போது 800 பயணிகளுடன் செந்தூர் விரைவு ரயில் சென்று கொண்டி ருந்தது.அப்போது ஸ்டேஷன் மாஸ்டர் ஜாபர் அலி(54) ஸ்ரீவைகுண்டத்தில் ரயிலை தடுத்து நிறுத்தி பெரும் விபத்தை தவிர்த்தார். இதனால் ஜாபர் அலிக்கு மத்திய அரசின் உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டேஷன் மாஸ்டர் ஜாபர் அலியை பாராட்டி தற்போது Ati Vishisht Rail Seva Puraskar விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.