இந்திய U-19 அணியில் என்ட்ரி கொடுக்கும் ராகுல் டிராவிட் மகன் சமித்!

- Advertisement -

0

19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு நான்கு நாள் கொண்ட போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதற்கான அறிவிப்பு சமீபத்தில் இந்திய அணி அறிவித்திருந்தது.அந்த வகையில் ரசிகர்களால் இந்திய கிரிக்கெட் அணியின் தடுப்பு சுவர் அன்போடு அழைக்கப்படும் ஜாம்பவான் ராகுல் டிராவிட்டின் மகன் சமித் இடம் பிடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இவருக்கு 2 வகையிலான தொடருக்கான அணியிலும் சமித்திற்கு இடம் கிடைத்துள்ளது. அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் மகாராஜா டி20 டிராபியில் மைசூரு வாரியர்ஸ் அணியில் தான் சமித் சீனியர் வீரர்கள் விளையாடும் போட்டியில் முதன் முதலாக அறிமுகமாகி உள்ளார்.
அந்த போட்டியிலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கினாலும் கூட சமித் ஏழு போட்டிகளில் 82 ரன்கள் அடித்துள்ளார்.புலிக்கு பொறந்தது பூனையாகாது என்று ஒவ்வொரு ஆட்டத்திலும் நிரூபித்து வருகிறார். சமித் பேட்டிங் செய்வது மட்டுமின்றி மித வேக பந்து வீச்சாளர் ஆவார்.இந்த போட்டிகள் புதுச்சேரி மற்றும் சென்னையில் நடைபெற இருக்கிறது. மேலும் இந்த தொடர் செப்டம்பர் முதல் அக்டோபர் மாதம் வரை நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.