ஆத்தூர் பேரூராட்சியில் பொதுமக்கள் குறைகளைவு செய்தல் முகாம்!

- Advertisement -

0

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பேரூராட்சியில் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண ஒவ்வொரு வார்டுகளிலும் குறைகளைவு செய்தல் முகாம் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் முருகன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,ஆத்தூர் பேரூராட்சியில் பாதுகாப்பான குடிநீர், பொது சுகாதாரம், கழிவுநீர் ஓடை பராமரிப்பு, சாலை பராமரிப்பு, தெருவிளக்கு பராமரிப்பு மற்றும் கட்டிட உரிமம் வழங்குதல், பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்குதல், புதிய குடிநீர் இணைப்பு வழங்குதல், புதிய கட்டிடங்களுக்கு சொத்துவரி, சொத்துவரி பெயர் மாற்றம் செய்தல் ஆகிய பணிகளை பொதுமக்களுக்கு எந்தவித சிரமமுமின்றி உடனுக்குடன் பேரூராட்சியில் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த பணிகள் தொடர்பாக பொதுமக்களுக்கு ஏதேனும் சிரமங்கள் இன்றி உடனுக்குடன் காலதாமதமின்றி மேற்கொள்ளும் பொருட்டு பேரூராட்சிக்குட்பட்ட வார்டு பகுதிகளுக்கு நேரடியாக சென்று மக்களை சந்தித்து குறை களைவு செய்து கொடுக்கும் முடிவு செய்யப்பட்டுள்து.

- Advertisement -

அதன்படி பேரூராட்சிக்குட்பட்ட 1 முதல் 15 வார்டுக்குட்பட்ட பொதுமக்களிடம், அந்தந்த வார்டுக்கு நேரடியாக சென்று பேரூராட்சித் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்து உடனடியாக தீர்வு காணப்படும். அதன்படி வரும் செப்.2ஆம் தேதி 1வது வார்டுக்குட்பட்ட வடக்கு ரதவீதி, 2ஆவது வார்டுக்குட்பட்ட கீழரதவீதி, வடக்கு ரதவீதி பகுதிகளிலும், செப்.5 ஆம் தேதி 3வது வார்டுக்குட்பட்ட ஆற்றங்கரை தெரு, முஸ்லிம் மேலத்தெரு, 4வது வார்டுக்குட்பட்ட பெரியதெரு, குளத்தாங்கரை தெரு, ரகுமான் தெரு, செப்.7ஆம் தேதி 5வது வார்டுக்குட்பட்ட யாதவர் தெரு, ஆற்றங்கரைதெரு, 6வது வார்டுக்குட்பட்ட வடக்குரதவீதி, மேலத்தெரு, முதல்சந்தி தெரு, மேலரதவீதி, 8வது வார்டுக்குட்பட்ட முடுக்குத்தெரு, மேலத்தெரு பகுதிகளிலும், செப்.10ஆம் தேதி 7வது வார்டுக்குட்பட்ட கீழரதவீதி, புண்ணைக்காயல் ரோடு, பேட்டைத்தெரு, 9வது வார்டுக்குட்பட்ட முத்தாரம்மன்கோவில் தெரு, மரைக்காயர் தெரு, மருத்துவர் தெரு, தளவாய்சாமி கோவில்தெரு, கீழரதவீதி, 10வது வார்டுக்குட்பட்ட மரைக்காயர் தெரு, சேனையர்தெரு, பரதர் தெரு, கீழ முத்தாரம்மன்கோவில்தெரு பகுதிகளிலும், செப்.12ஆம் தேதி 11வது வார்டுக்குட்பட்ட தெற்கு ரதவீதி, பழைய கிராமம், மேலரதவீதி, செப்.14ஆம் தேதி 12வது வார்டுக்குட்பட்ட புதுநகர், ஆவரையூர், தலைப்பண்ணை, 13வது வார்டுக்குட்பட்ட கீரனூர், 14வது வார்டுக்குட்பட்ட தலைவன்வடலி, கீழக்கரனூர், 15வது வார்டுக்குபட்ட தலைவன்வடலி ஆகிய பகுதிகளில் பொதுமக்களின் குறை களைவு முகாம் நடைபெறவுள்ளது. எனவே பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொண்டு தங்களது குறைகளை மனுக்களாக பேரூராட்சித் தலைவர் கமால்தீன் அளித்து உடனடி தீர்வு பெற்றுக் கொள்ளலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.