தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்…!

- Advertisement -

0

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தார். முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க ஊராட்சி உள்ளிட்ட புறநகர் பகுதியில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின்படி மக்கள் குறை கேட்பு முகாம் நடைபெறுவதை போல் மாநகராட்சி பகுதியில் ஓவ்வொரு வாரமும் ஓவ்வொரு மண்டலம் வாரியாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. பெறப்படும் மனுக்கள் மீது முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காணப்படுகிறது என்றார்.

- Advertisement -


நிகழ்ச்சியில், மாநகராட்சி உதவி பொறியாளர் சரவணன், சுகாதார அலுவலர் ராஜபாண்டி, உதவி ஆணையர் சுரேஷ்குமார், நகர அமைப்பு திட்ட செயற்பொறியாளர் ரங்கநாதன், நகர்நல அலுவலர் வினோத்ராஜா, மாநகராட்சி மண்டல தலைவர் நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் கீதா முருகேசன், ரெங்கசாமி, பவானி மார்ஷல், நாகேஸ்வரி, அந்தோணி மார்ஷலின், ஜெபஸ்டின் சுதா, தேவேந்திரன், கற்பகக்கனி, சுப்புலட்சுமி, போல்பேட்டை திமுக பிரதிநிதி ஜேஸ்பர் ஞானமார்ட்டின், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.