மாநகர காவல் நிலைய பகுதிகளில் குற்றங்ககளை தடுக்க பொதுமக்களை அழைத்து கலந்தாய்வு கூட்டம்!
திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.ந.காமினி, இ.கா.ப., அவர்கள் வழிகாட்டுதலின்பேரில் திருச்சி மாநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றச்சம்பவங்கள் மற்றும் உடல்ரீதியான குற்றங்கள் நடைபெறும் பகுதிகளில் உள்ள பொதுமக்களை நேரில் அழைத்து கலந்தாய்வு கூட்டங்கள் நடைபெற்றது. திருச்சி மாநகரத்தில் கண்டோன்மெண்ட் காவல் சரகத்தில் 4 இடங்களிலும், ஸ்ரீரங்கம் காவல் சரகத்தில் 4 இடங்களிலும், தில்லைநகர் காவல் சரகத்தில் 3 இடங்களிலும், பொன்மலை, கே.கே நகர், காந்திமார்க்கெட் ஆகிய காவல் சரகங்களில் தலா 2 இடங்களில் உள்ள 31 வார்டுகளில் மொத்தம் 17 இடங்களில் காவல் உதவி ஆணையர், காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் தலைமையில் குற்றம் மற்றும் உடல் ரீதியான குற்றங்கள் தடுப்பு, காவல் செயலி (KAVALAN APP), சைபர் கிரைம் பற்றிய விழிப்புணர்வு கூட்டம், நடைபெற்றது.
மேலும் தங்கள் பகுதிகளில் குற்றம்புரிவோர் பற்றி தகவல்களை உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்கவும், கடைகள், அபார்ட்மெண்ட்டுகள் மற்றும் வணிக வளாகங்கள் போன்ற முக்கிய இடங்களில் குற்றங்களை தடுக்க CCTV கேமரா பொருத்தவும், இரவு காவலாளிகளை பணியில் அமர்த்தவும் அறிவுறுத்தப்பட்டது.