திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம்!

- Advertisement -

0

திருவெறும்பூர் அருகே உள்ள கைலாஷ் மகளின் நகரில் பழைய பால் பண்ணை முதல் துவாக்குடி வரை சட்டவிரோதமாக சர்வீஸ் சாலை அமைக்காமல் அமைத்த சாலைக்கு வாகன வசூல் செய்யும் கண்டித்தும் ,சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என்ற உயர்நீதி மன்ற உத்தரவை மதிக்காமல் நிலத்தை கையகப்படுத்தாமலும் சர்வீஸ் சாலை அமைக்கும் வரை அனைத்து கிராசிங்குகளிலும் சிக்னல் அமைத்து போக்குவரத்து காவலரை பணியில் நிறுத்த சொல்லியும்,17 ஆண்டுகளில் 1500 பேர் மேற்பட்ட சாலை விபத்துக்கள் நடைபெற்ற நிலையில் ஒரு சில சம்பவ இடத்திலேயே இறந்ததை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திராவிட மாடலா ஆட்சியை அலட்சிய போக்கை கண்டித்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி நாடகம் மூலம் ஆளும் கட்சி காதில் விழும் வகையில் தப்படைத்து கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் திருவெறும்பூர் சுற்றியுள்ள பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

 

Leave A Reply

Your email address will not be published.