திருவரம்பூரில் அரசு மதுபான கடைகளை இழுத்து மூடக்கோரி இந்திய மாணவர் சங்கத்தின் போராட்டம்!
அரசு மதுபான கடைகளை இழுத்து மூடக்கோரி பல முறை போராட்டம் நடத்தியும் சென்ற ஆண்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்திய இதுவரைக்கும் எந்த தீர்வும் கிடைக்காத நிலையில் இந்திய மாணவர் சங்கத்தின் திருச்சி புறநகர் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் மாவட்டத் தலைவர் வைரவளவன் தலைமையில் நடைபெற்றது.
இந்த மனு கொடுக்கும் போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர் . ஜி. கே.மோகன் கலந்து கொண்டார். மாவட்டச் செயலாளர் தோழர் ஆமோஸ் மாவட்ட குழு உறுப்பினர் அர்ஜுன், ராஜேஷ் துவாக்குடி அரசு கலைக் கல்லூரியின் கிளை துணைச் செயலாளர் தோழர் துளசி ராமன்,திருவரம்பூர் ஐடிஐ கல்லூரி நிர்வாகி பழனிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.