திருவெறும்பூர் பாரத மஸ்தூர் தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..!

- Advertisement -

0

திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவனம் மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனத்தின் சுமார் 3000 ஏக்கர் நிலப்பரப்பு தொழிற் சாலை மற்றும் குடியிருப்பு, கல்வி நிறுவனம் அமைந்து உள்ளது.இந்த நிலையில் பெல் நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தில் 450 ஏக்கர் நிலத்தை தமிழக அரசிடம் வரும் 30 தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என திருச்சி கலெக்டர் பெல் நிறுவனத்திற்கு தமிழக அரசு தெரிவித்திருப்பதாக தகவல்கள் வருகின்றது.அதை கண்டித்து பெல் கிழக்கு நிறுவன நுழைவாயில் முன்பாக நடந்த வாய் கூட்டத்திற்கு பெல் பாரத மஸ்தூர் சங்க தலைவர் ஜெயராமன் தலைமை வைத்தார். மாநில பொதுச் செயலாளர் சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுபெல் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தை தமிழக அரசிற்கு ஒப்படைக்க சொல்லும் திருச்சி கலெக்டரை கண்டித்து கண்டன உரை நிகழ்த்தினார்.

- Advertisement -

இதன் தொடர்ச்சியாக தமிழக அரசை 27ம் தேதி பெல் பகுதி இரண்டின் முன்பு வாயிற் கூட்டம் நடத்துவது என்றும், வரும் 30ம் தேதி காலை திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த பெல் பாரத மஸ்தூர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளதாகவும், இந்தப் போராட்டத்தில் பெல் தொழிலாளர்கள் அனைவரும் பெல் நிறுவனம் நமது நிறுவனம் என்ற உணர்வுடன் கலந்து கொள்ள வேண்டும் என பெல் அனைத்து தொழிலாளர்களுக்கும்  பாரத மஸ்தூர் தொழிற்சங்கம் சார்பில் அழைப்பு விடுத்தனர்.இதில் பாரத மஸ்தூர் சங்க காரியகர்த்தா மணி உட்பட  தொழிற்சங்கத்தை சேர்ந்த ஏராளமான கலந்து கொண்டனர். அமைப்புச் செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.