திருச்சி துவாக்குடியில்உள்ள தமிழ் நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் பத்து அம்ச கோரிக்கை நிறைவேற்ற கோரி கல்லூரி வாசல் சுமார் 80 மேற்பட்ட பேராசிரியர்கள் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .திருச்சி துவாக்குடியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் நிலுவையில் உள்ள பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சுமார் 80 மேற்பட்ட பேராசிரியர்கள் வாயில் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தலைவர் மற்றும் அகில இந்திய பல்கலைகழக கல்லூரி ஆசிரியர் கூட்டமைப்பின் துணை தலைவர் டேவிட் லிவிங்ஸ்டன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போராட்டத்தின் கோரிக்கையாக,பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.புதிய கல்விக் கொள்கை திட்டத்தை கைவிட வேண்டும்.இந்தியா முழுவதும் அனைத்து பேராசிரியர்களுக்கும் ஒரே சரிசமமான 65 வயது என்ற ஓய்வு வயதை நிர்ணயிக்க வேண்டும்.கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கும் பேராசிரியர் பணி மேம்பாடு வழங்கப்பட வேண்டும்.இணை பேராசிரியர் பணி மேம்பாட்டிற்கு கட்டாயம் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை தளர்வு செய்ய வேண்டும்.புத்தாக்கம் மற்றும் புத்தொளி பயிற்சிகளுக்கு பல்கலைக்கழக மானிய குழு அளித்த காலவரம்பு நீட்டிப்பை தமிழ் நாட்டில் நிறைவேற்ற வேண்டும்.எம்.பில் மற்றும் முனைவர் பட்டம் முடித்த பேராசிரியர்கள் அனைவருக்கும் ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும்.மத்திய அரசு உடனடியாக எட்டாவது ஊதிய குழுவை அமைக்க வேண்டும்.கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்.நீண்ட காலமாக மாற்றுப் பணியில் இருக்கும் பேராசிரியர்கள் உடனடியாக மாற்றுப் பணிகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி முன்பு கோஷம் எழுப்பி போராட்டம் நடைபெற்றது.