மனமகிழ்மன்றம் என்ற பெயரில் தனியார் மது விற்பனைக்கு அனுமதிக்கக்கூடாது: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!

- Advertisement -

0

மதுவால் இளைஞர்கள், மாணவர்கள், முதியோர் என பலதரப்பட்டவர்களும் உடல் அளவில், மனதளவில் பாதிக்கப்பட்டு சமூக விரோதச் செயல்கள் அதிகரிப்பதை ஊடகச் செய்திகளின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. இச்சூழலில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் வட்டார பேரூராட்சி பகுதிகளில் மதுக்கடைகளைத் திறக்க தனி நபர்களுக்கு அனுமதி அளித்திருப்பது மதுக்குடிக்கும் மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், வருங்கால சமுதாயம் சீரழியவும், சட்டம் ஒழுங்கு சீர்கெடவும் வழி வகுக்கிறது.

- Advertisement -

எனவே மனமகிழ் மன்றம் என்ற பெயரில் தனியாருக்கு வழங்கப்பட்ட டாஸ்மாக் மது விற்பனைக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும் மதுவிலக்குக்கு வழி வகுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.