திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்!
திருச்சி மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் அரியமங்கலம் சேஷசாயி தொழில்நுட்ப பயிலகத்தில் (எஸ்.ஐ.டி.) நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2, ஐ.டி.ஐ., இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள் மற்றும் பட்டய படிப்புகள் போன்ற கல்வித்தகுதியுடைய, 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் தங்களது சுய விவர குறிப்புடன் அனைத்து கல்விச்சான்றுகளின் நகல் மற்றும் ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் நேரில் கலந்து கொள்ளலாம். இந்த தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.