என்.சி.சி.,யில் அதிகமான இளைஞர்கள் இணைய வேண்டும். வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு முக்கியம்’ என பிரதமர் மோடி தெரிவித்தார்.இந்தியாவுக்கு கயனா நாட்டிற்கும் இடையிலான கலாசாரம் மற்றும் ராஜதந்திர உறவுகள் வலுவாக உள்ளது. இந்தியாவில் இருந்து நீண்ட தொலைவில் இருக்கும் கயானாவில் ‘மினி பாரத்’ உள்ளது. சுமார் 180 ஆண்டுக்கு முன், இந்தியர்கள் கயானாவிற்கு வயல்களில் வேலை செய்ய அழைத்துச் செல்லப்பட்டனர். இன்று கயானாவில் உள்ள இந்திய வம்சாவளியினர் அரசியல் போன்ற பல்வேறு துறைகளில் முன்னணியில் உள்ளனர்.என்.சி.சி., எனப்படும் தேசிய மாணவர் படையில் அதிகமான இளைஞர்கள் இணைய வேண்டும். வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு முக்கியம்.
நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் ஆற்றல், திறன்கள் மற்றும் அர்ப்பணிப்பு அவசியம். தேசிய இளைஞர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படும் சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளான ஜனவரி 12ம் தேதி, அவரது 162வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்படும். இதையொட்டி மாபெரும் இளைஞர்கள் மாநாடு நடத்தப்படும். அரசியல் பின்னணி இல்லாத இளைஞர்களை அரசியலுடன் இணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இளைஞர்கள் மாநாடு நடத்தப்பட உள்ளது.