த.வெ.க.மாநாட்டிற்கு சென்றபோது உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கிய தலைவர் விஜய்!

- Advertisement -

0

தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு சென்றபோது, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நிதியுதவி அறிவித்துள்ளார்.அதன்படி, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவியை விஜய் வழங்கினார். கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி அன்று நடைபெற்ற த.வெ.க முதல் மாநில மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். மாநாட்டிற்கு புறப்பட்டபோதும், மாநாடு முடிந்து வீடு திரும்பும்போதும் 6 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதில், சென்னையைச் சேர்ந்த வசந்தகுமார், ரியாஸ், சார்லஸ் உள்பட திருச்சி, திருவண்ணாமலையை சேர்ந்த 6 பேருக்கு தலா ரூ.2 லட்சத்தை விஜய் வழங்கியுள்ளார். மேலும், குடும்ப சூழல் பொருத்து, சிலருக்கு கூடுதல் நிதி, இறந்தவர்களின் குழந்தைகள் கல்வி செலவும் த.வெ.க. ஏற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.