பிரபல திரைப்பட தயாரிப்பாளர் மோகன் நடராஜன் விஜய் நடித்த ‘கண்ணுக்குள் நிலவு’, அஜித் நடித்த ‘ஆழ்வார்’, சூர்யா நடித்த ‘வேல்’, விக்ரம் நடித்த ‘தெய்வத்திருமகள்’ உட்பட பல படங்களை தயாரித்துள்ளார்.மோகன் நடராஜன் (71)இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.மோகன் நடராஜன் தயாரித்த படங்கள்,சுரேஷ், நதியா நடிப்பில் ‘பூக்களை பறிக்காதீர்கள்’, விஜயகாந்த், நதியா நடித்த ‘பூ மழை பொழியுது’, சுரேஷ், நதியா நடித்த ‘இனிய உறவு பூத்தது’, பிரபு, ரூபிணி நடித்த ‘என் தங்கச்சி படிச்சவ’, பிரபு, கௌதமி நடித்த ‘பிள்ளைக்காக’, அர்ஜுன், ரூபினி நடித்த ‘எங்க அண்ணன் வரட்டும்’, சத்யராஜ், கௌதமி நடித்த’வேலை கிடைச்சிருச்சு’ , அம்பரீஷ், மாலா ஸ்ரீ நடித்த ‘ரவுடி எம்எல்ஏ’ (கன்னடம்)மேலும் பல படங்களை தயாரித்துள்ளார்.இந்நிலையில் தயாரிப்பாளர் மோகன் நடராஜனுக்கு நடிகர்கள், திரைப்பட பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் சூர்யா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.