கவிஞர் வாலியின் 93 வது பிறந்தநாள் மற்றும் விருதுகள் வழங்கும் விழா:20ந்தேதி நடக்கிறது!

- Advertisement -

0

கவிஞர் வாலியின் 93-வது பிறந்த நாள் விழா திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகில் உள்ள சீனிவாசா ஹாலில் வரும் 20ந்தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.விழாவிற்கு திருச்சி அம்மன் ஸ்டீல் மேலாண்மை இயக்குநர் எம்.சோமசுந்தரம் தலைமை ஏற்கிறார்.கவிஞர் நெல்லை ஜெயந்தா வரவேற்புரையாற்றுகிறார்.வாலி பதிப்பகத்தின் பிரேம் சங்கர் நோக்கவுரையாற்றுகிறார்.இவ்விழாவில் பிரபல திரைப்படப் பாடலாசிரியர் பூவை செங்குட்டுவன்,எழுத்தாளர் எம்.எஸ்.பெருமாள் ஆகிய இருவருக்கும் திருச்சி சிவா.எம்.பி. பாராட்டி விருது அளிக்க உள்ளார்.கவிஞர் வாலியின் நெருங்கிய நண்பர் கோவைத் தொழிலதிபர் கிருஷ்ண குமார், விருதாளர் இருவருக்கும் தலா 50 ஆயிரம்ரூபாய் பொற்கிழி வழங்குகிறார்.

- Advertisement -

விழாவில் சொற்பொழிவாளர் சுகிசிவம் வாழ்த்துரை வழங்குகின்றார் .திரைப்பட நடிகர் தம்பி ராமையா வாலி எழுதிய நடிகர் பிரபு நடித்த திரைப்படப்படங்களின் பாடல் தொகுப்பினை வெளியிடுகிறார்.நெல்லை பாலசுப்ரமணியன் பெற்றுக் கொள்கிறார்.சுவாதி தியாகராஜன் நன்றி கூறுகிறார்.திருச்சி நகைச்சுவை மன்றச் செயலாளர் சிவகுருநாதன் விழாவினை ஒருங்கிணைக்கிறார்.விழாவின் தொடக்கத்தில் வாலி ஒரு வரலாறு என்ற குறும்படம் திரையிடப்படுகிறது.அனைவருக்கும் இலவச அனுமதி என்று விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.