திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தடையை மீறி பாமகவினர் இன்று திடீர் போராட்டம் :மாவட்ட செயலாளர் உள்பட 30 பேர் கைது!

- Advertisement -

0

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குறித்த கருத்து தொடர்பாக முதல்வருக்கு எதிராக பாமகவினர் பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.இதேபோல் திருச்சியில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு திருச்சி தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் பி.கே.திலீப் குமார் தலைமையில் முதல்வருக்கு எதிராக தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

- Advertisement -

இந்த நிகழ்வில் மாவட்ட அமைப்புச் செயலாளர். வி எழிலரசன். மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர். ஹரிஹரன். மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர். எஸ் கே ஜே ரபிக். ஒன்றிய செயலாளர். ஐயப்பன். இளைஞர் அணி பொறுப்பாளர் பிகே ஆனந்த். மற்றும் தினேஷ்குமார். ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது தடையை மீறி போராட்டம் நடத்தியதாக போலீசார் பாமகவினரை கைது செய்ய முற்பட்டனர் இதனால் போலீசாருக்கும் பாமகவினருக்கும் இடையே சிறிது வாக்குவாதம் தள்ளுமுள்ளு மோதல் ஏற்பட்டது பின்னர் மாவட்ட செயலாளர் திலிப் குமார் உட்பட 30 பாமக நிர்வாகிகளை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர் இந்த சம்பவத்தால் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.