திருச்சியில் ஆசிரியர் சங்க மாநாட்டில் காலி பணியிடங்களை அதிகரிக்க கோரி பட்டதாரி ஆசிரியர்கள் தமிழக அரசிற்கு மனு….
திருச்சி செயின்ட் ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தமிழ்நாடு முன் பருவக்கல்வி ஆசிரியர்கள் சங்கம் நடத்திய அரசுப்பள்ளிகளில் முன் பருவக்கல்வி ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு அரசிற்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் மாநில ஒருங்கிணைப்பாளர் பைரோஸ் வரவேற்புரை ஆற்றினார்.இதில் காலிப்பணியிடம் அதிகரிக்க கோரும் பட்டதாரி ஆசிரியர்கள் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் இயன்ற நிவாரணத் தொகை 70000 (எழுபதாயிரம்) தமிழ்நாடு தொடக்க கல்வி துறை இயக்குனர் நரேஷ் காசோலை வழங்கப்பட்டது. மேலும் நாங்கள் கடந்த 11 ஆண்டுகளாக பள்ளிக்கல்வி துறையில் நிரப்பபடாமல் இருந்த பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கூடிய நியமனத் தேர்வினை எழுதிய பட்டதாரி ஆசிரியர்கள்
தற்போது 2803 ஆசிரியர்கள் இப்பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் .பள்ளிகளில் சுமார் 13000 மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடம் உள்ளதாக தெரியவருகிறது.
மாண்புமிகு முதல்வர் வருகிற ஜனவரி 2026 க்குள் 19000 ஆசிரியர் பணியிடங்கள் டிஆர்பி-ல் நிரப்படும் என்று சட்டசபையில் அறிவித்தார். பட்டதாரி காலி பணியிடம் அதிகரிக்கும் என்ற பெரும் நம்பிக்கை எங்களுக்கு அளிக்கிறது. இந்த 19000 ஆசிரியர் பணியிடங்களில் எங்களுக்கும் இடம் தரக்கோரி மனு அளித்ததாகவும் கூறினார்கள். நிகழ்வில் செயலாளர் சித்தன், துணை செயலாளர் தவமணி, சிகரம் சதீஷ்குமார், நாகவேணி மற்று ஏராளமான பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்