பாரதிதாசன் பல்கலைக்கழக பெரியார் உயராய்வு மையம் சார்பில் பெரியார் விருதுகள் வழங்கும் விழா!

- Advertisement -

0

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் பெரியார் உயராய்வு மையம் சார்பில் பெரியார் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் வழங்கப்படும். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவில்லை. இந்த நிலையில் இந்தாண்டு மூன்றாண்டுகளுக்கும் சேர்த்து விருது வழங்கப்படும் என பெரியார் உயராய்வு மையம் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன் படி விருதிற்காக விண்ணப்பிக்கப்பட்டதில் பெரியார் சிறப்பு விருதுக்கு மூவரும், பெரியார் விருதுக்கு மூவரும், பெரியார் பரிசுக்கு மூவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.பெரியாரின் 146 பிறந்த நாளான இன்று பெரியார் உயராய்வு மையம் சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் விருது வழங்கும் விழா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

- Advertisement -

பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் செல்வம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர் காளிதாசன், தேர்வு நெறியாளர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் பெரியார் சிறப்பு விருதுபாலன்(2021-2022), அன்பழகன் (2022-2023), கமலக்கண்ணன்(2023-2024) ஆகியோருக்கு வழங்கப்பட்டது. மூவருக்கும் விருதுக்கான கேடயமும் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது.பெரியார் விருது ஆர்.கெ.துரைசாமி(2021-2022), வரதராசன்(2022-2023), நெடுஞ்செழியன் (2023-2024) ஆகியோருக்கு வழங்கப்பட்டது. மூவருக்கும் விருதுக்கான கேடயம் மற்றும் ரூ.50,000 காசோலை வழங்கப்பட்டது.பெரியார் பரிசு பிரபாகரன்(2021-2022), மலைக்கொழுந்தன்(2022-2023), தளபதிராஜ்(2023-2024) ஆகியோருக்கு வழங்கப்பட்டது. மூவருக்கும் கேடயம் மற்றும் ரூ.50,000 காசோலை வழங்கப்பட்டது.இந்த நிகழ்வில் பெரியார் உயராய்வு மையத்தின் இயக்குனர் கோவிந்தராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.