பராமரிப்பு பணிக்காக 2 நாட்களுக்கு பாஸ்போர்ட் இணையதள சேவை நிறுத்தம்!

- Advertisement -

0

பராமரிப்பு பணிக்காக இன்று முதல் 2 நாட்களுக்கு பாஸ்போர்ட் இணையதள சேவை நிறுத்தப்பட உள்ளது.சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் தற்போது பாஸ்போர்ட் சேவா திட்ட இணையதள சேவை www.passportindia.gov.in என்ற முகவரி மூலம் அளிக்கப்பட்டு வருகிறது.இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணி முதல் வருகிற 23-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 6 மணி வரை தொழில்நுட்ப பராமரிப்பு மேற்கொள்ளப்படுகிறது.இதனால் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு இந்த காலகட்டத்தில் எந்த சேவையும் கிடைக்காது.ஆகவே விண்ணப்பதாரர்கள் முன்அனுமதி மற்றும் விளக்கங்களுக்கு திட்டமிடப்பட்ட பராமரிப்புக்குப் பிறகு இணையதள முகவரியை பார்வையிடலாம்’என அறிவுறுத்தி உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.