பாராலிம்பிக் பேட்மிண்டன் பிரிவில் தமிழக வீராங்கனை காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த துளசி முருகேசன், வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார். இதன் மூலம் பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை துளசிக்கு கிடைத்திருக்கிறது.முதல் செட்டை 17 க்கு 21 என்ற கணக்கில் துளசி இழந்தார். இதனை அடுத்து இரண்டாவது செட்டில் சீன வீராங்கனை தன்னுடைய அனுபவமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பத்துக்கு 21 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதன் மூலம் துளசி தோல்வியை தழுவினாலும், அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
இதேபோன்று வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் தமிழக வீராங்கனை திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மனிஷா ராமதாஸ் டென்மார்க் வீராங்கனை கேத்தரினை எதிர்கொண்டார். இதில் தொடக்கம் முதலில் அதிரடியாக விளையாடிய மனிஷா 21க்கு 12, 21க்கு 8 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தை கைப்பற்றினார். இந்த போட்டி வெறும் 25 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது.இதன் மூலம் பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை மனிஷா கைப்பற்றினார்.