மதுரையில் நடைபெறும் விவசாய கருத்தரங்கில் பங்கேற்க விவசாயிகளை அழைத்துச் செல்ல சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் ஏற்பாடு!

- Advertisement -

0

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வருகிற  2025-ல் ஜனவரி 06 மற்றும் 07 ம் தேதிகளில் மாபெரும் இயற்கை விவசாய கருத்தரங்கு நடைபெற உள்ளது. இக்கருத்தரங்கில் பங்கேற்க திருச்சி சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 120 இயற்கை விவசாயம் செய்பவர்கள் (06.01.2025 அன்று 60 விவசாயிகள் மற்றும் 07.01.2025 அன்று 60 விவசாயிகள்) கருத்தரங்கிற்கு அழைத்துச் செல்லப்பட இருக்கின்றனர்.கருத்தரங்கில் பங்கு பெற ஆர்வமுள்ள இயற்கை விவசாயிகள் தங்களது பெயர், முகவரி, மின்னஞ்சல் (இருந்தால் மட்டும்), சாகுபடி செய்யும் பயிர் விபரம், இயற்கை விவசாயத்தில் அனுபவம் மற்றும் இயற்கை விவசாயத்தில் சான்று பெற்றுள்ளீர்களா என்ற விவரங்களுடன் சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தை நேரிலோ அல்லது வாட்ஸ் அப் என்ற எண்ணுக்கு 9171717832, 9080540412 ,8838126730  மூலமாகவோ நாளை( 06.12.2024- (வெள்ளி) மதியம் 2 மணிக்குள் முன்பதிவு செய்யவும்.மேலும் விபரங்களுக்கு 04312962854, 9171717832, 9080540412, 8838126730 என்ற எண்ணில் அலுவலக நேரத்தில் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை) தொடர்பு கொள்ள சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் சி.ராஜா பாபு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfonE8KNMtYUG6cNN6tBejGMhQGidc8vZF42yRPTP9tJ1kJew/viewform?vc=0&c=0&w=1&flr=0

Leave A Reply

Your email address will not be published.