திருச்சி பஞ்சப்பூரில் புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகளை நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, கட்டுமான பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையாளர் வே.சரவணன், மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இருந்தனர்.