அதிமுக 53வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாநகர மாவட்ட கழக சார்பில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிப்பு!

- Advertisement -

0

அதிமுக கழக பொது செயலாளரும்,சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க,கழக அமைப்பு செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளருமான,முன்னாள் அமைச்சர் P.தங்கமணி MLA அறிவுறுத்தலின்படி கழக 53-வது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் மாவட்ட கழக செயலாளர் ஜெ.சீனிவாசன்  தலைமையில் திருச்சி நீதிமன்ற வளாகம் அருகே அமைந்துள்ள எம்ஜிஆர்  திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

- Advertisement -

நிகழ்ச்சியில் மாவட்ட புரட்சி தலைவி அம்மா பேரவை செயலாளர் கார்த்திகேயன், மாவட்டக் கழக துணை செயலாளர் வனிதா, மலைக்கோட்டை ஐயப்பன், கழகப் பொதுக்குழு உறுப்பினர் வெல்லமண்டி பெருமாள், மாவட்ட கழக இணை செயலாளர் ஜாக்குலின், தலைமை கழக செயற்குழு உறுப்பினர் நசீமா பாரிக், 14 வது வார்டு மாமண்டு உறுப்பினர் அரவிந்தன், மலைக்கோட்டை பகுதி செயலாளர் அன்பழகன், ஏர்போர்ட் பகுதி கழகச் செயலாளர் விஜி, உறையூர் பகுதி கழக செயலாளர் பூபதி, மகளிர் அணி செயலாளர் ஜெயஸ்ரீ,மாவட்ட கழக நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர்கள்,மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், வட்டக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.

 

 

Leave A Reply

Your email address will not be published.