வ.உ.சி 153 வது பிறந்தநாளில் அரசுஅலுவலர்கள்,அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை…!

- Advertisement -

0

தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனாரின் 153 வது பிறந்தநாள் விழாவையொட்டி அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.சுதந்திர போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனாரின் 153 வது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு திமுக சார்பில் வடக்கு மாவட்ட செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

- Advertisement -

தமிழ்நாடு அரசு சார்பில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் ரமேஷ் ஆகியோர் கலத்து கொண்டு வ.உ.சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில், வ.உ.சிதம்பரனார் வாரிசு செல்வி மற்றும் குடும்பத்தினர் உடனிருந்தனர்.

அதேபோல் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட செயலாளரருமான எஸ்.பி. சண்முகநாதன் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் அமைப்புச்சாரா ஓட்டுநர் அணி செயலாளர் சுதாகர் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் முரளிதரன் தலைமையில் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மற்றும் பிள்ளைமார் சமுதாய அமைப்பினர், பல்வேறு கட்சியினர், அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.