திருவரம்பூரில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் இரு வாய்க்காலிலும் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்!

- Advertisement -

0

திருச்சி மாவட்டம் திருவரம்பூர் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் சம்பா சாகுபடிக்கு போதுமான தண்ணீர்  உய்யக்கொண்டான் வாய்க்காலிலும், கட்டளை வாய்க்காலிலும்  விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய போதுமான தண்ணீர் வந்து சேரவில்லை. பொதுப்பணித்துறையையும்,மாவட்ட நிர்வாகத்தையும் பலமுறை சந்தித்து தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில்  மனு கொடுத்தோம். ஆனால் இதுவரை சம்பா சாகுபடிக்கு தேவையான தண்ணீர் வந்து சேரவில்லை. எனவே இந்த நிர்வாகத்தை கண்டித்து இன்று மாலை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருவரம்பூர் கடைவீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு  தமிழ்நாடு விவசாய சங்க திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் ஆர் குருநாதன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாய சங்க நிர்வாகிகள் ஆர் ரவிக்குமார், பி மகேந்திரன், கருணாநிதி,ஏ.கணேசன்,கே.சி.பாண்டியன்,எம் மணிவாசகம்,டி.எஸ்.ஸ்டாலின், சங்கிலிமுத்து, மாற்றுத்திறனாளிகள் ஒன்றிய செயலாளர்  ஜேசித்ரா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் கே.எல்.தமிழ்ச்செல்வன் ஆகியோர்  தண்ணீர் வராததை கண்டித்து கண்டன உரையாற்றினார்கள்.

- Advertisement -

இறுதியாக  இரு வாய்க்கால் வரலாறுகளையும், விவசாயிகள் படும் துயரத்தை தமிழ்நாடு விவசாய சங்கத்தின் திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் ஆர்.நடராஜன் விளக்கி பேசினார். உடனடியாக இரு வாய்க்கால்களில் பயன்பெறும் விவசாயிகளுக்கு ஏரிகள்,குளங்கள்,குட்டைகள் உடனடியாக தண்ணீர் நிரப்பி தர வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொண்டார். தமிழக அரசும்,மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறையும் இன்னும் ஒரு வார காலத்துக்குள் அனைத்துப் பகுதியில் இருக்கும் விவசாயிகளுக்கும் தண்ணீர் நிரப்பி தர வேண்டும் .இல்லையென்றால் திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் நடத்தப்படும். எனவே அரசு எங்களை அடுத்த கட்ட போராட்டத்திற்கு நகர்த்தாமல் போதுமான தண்ணீரை விவசாயத்திற்கு வழங்கி விவசாயிகளை பாதுகாக்க வேண்டுமாய் தமிழ்நாடு விவசாய சங்கம் கேட்டுக்கொள்கிறது.  நிறைவாக தமிழ்நாடு விவசாய சங்கத்தின் ஒன்றிய குழு உறுப்பினர் எம்.ராஜகோபால் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.