திமுக கழகத்தின் நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்த நாளை முன்னிட்டு கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு வழிகாட்டுதலின் மத்திய மாவட்ட திமுக சார்பில் சிந்தாமணி உள்ள அண்ணாவின் உருவ சிலைக்கு மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையிலும் மாநகர செயலாளரும், மேயருமான அன்பழகன் முன்னிலையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி,அந்தநல்லூர் ஒன்றிய தலைவர் துரைராஜ், மத்திய மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் சிங்கராம், முன்னாள் கவுன்சிலர் கண்ணன், பொன்னகர் பகுதி செயலாளர் மோகன்தாஸ், மத்திய மாவட்ட,மாநகர நிர்வாகிகள், அனைத்து ஒன்றிய பகுதி, நகர பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள்,அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள், கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்.