திருப்பூரில் அ.தி.மு.க.,சார்பில் தமிழக அரசைக் கண்டித்து டிச.,3ல் உண்ணாவிரதப் போராட்டம்:இ.பி.எஸ்.அறிவிப்பு!

- Advertisement -

0

தமிழக அரசு  ஆட்சிக்கு வந்த உடனேயே சொத்து வரி உயர்வு, குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் கட்டணம் உயர்வு, குப்பை வரி விதித்தல் என்று பல்வேறு கட்டண உயர்வுகளை தமிழக மக்களின் தலையில் சுமத்தியதைக் கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் தமிழகமெங்கும் பல்வேறு கண்டன ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.இந்நிலையில் தி.மு.க., அரசு, இனி ஆண்டுதோறும் 6 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்படும் என்பதுடன், சொத்து வரி உயர்த்தப்படும்போதெல்லாம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புக் கட்டண உயர்வு, குப்பை வரி உயர்வு மற்றும் ஏனைய மறைமுக வரி உயர்வுகளையும் அறிவித்து, அதன்படி மூன்றாண்டுகளில் இரண்டாம் முறையாக கடுமையாக உயர்த்தப்பட்ட வரி உயர்வு இந்த ஆண்டு முதல் வசூலிக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களின் எந்தவித எதிர்ப்பையும் கண்டுகொள்ளாத மக்கள் விரோத தி.மு.க., அரசு பல்வேறு வரி உயர்வுகள் தவிர, அனைத்து விதமான பதிவுக் கட்டணங்கள் மற்றும் அரசு கட்டணங்கள் பல மடங்கு உயர்வு, பால், அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு, மூன்று முறை மின்கட்டண உயர்வு என்று பல்வேறு வரிச் சுமைகளையும், கட்டண உயர்வுகளையும் தமிழக மக்களின் தலையில் சுமத்தி வருகிறது.எனவே தி.மு.க., அரசைக் கண்டித்து வரும் டிச.,3ம் தேதி அ.தி.மு.க., சார்பில் திருப்பூரில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று இ.பி.எஸ்., அறிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.