சாலையில் கொட்டிய ஆயில்… அடுத்தடுத்து சறுக்கி விழுந்த 25-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள்…!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் குசைகுடா நகரம் சாலை உள்ளது. இந்த சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு எண்ணைய் லாரியிலிருந்து எரிபொருள் கசிந்து சாலையில் சிந்தியது. இதன் காரணமாக அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து எண்ணெயில் சறுக்கி சரிந்து கீழே விழுந்தது. கிட்டதட்ட 25க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் அந்த எண்ணையால் சறுக்கி கீழே விழுந்தது.
அடுத்தடுத்து இருசக்கர வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து சறுக்கி விழுந்து விபத்து ஏற்பட்ட நிலையில் அனைவரும் காயங்களுடன் உயிர்த்தப்பினர். உயிர் சேதம் அதிஷ்டவசமாக ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து மரத்தூள் மற்றும் மணல் போன்றவற்றை அந்த சாலையில் தெளித்து போக்குவரத்து காவல்துறையினர் அதனை சரி செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.