அமெரிக்கா சேர்ந்த 3 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிப்பு!

- Advertisement -

0

நிறுவனங்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் செழிப்பை பாதிக்கிறது என்பது பற்றிய ஆய்வுக்காக 3 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு, பிரபல விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் பரிசு வழங்கப்படுகிறது. இந்தாண்டு, மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

- Advertisement -

இந்நிலையில், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விருதானது அமெரிக்காவின் கேம்ப்ரிட்ஜ் நகரில் உள்ள மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் டேரன் அசெமோக்லு, சைமன் ஜான்சன் மற்றும் சிகாகோ பல்கலையின் ஜேம்ஸ் ஏ. ராபின்சன் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. நிறுவனங்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் செழிப்பை பாதிக்கிறது என்பது பற்றிய ஆய்வுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.