13 ஆண்டுகளுக்கு முன்பு தடை விதிக்கப்பட்ட நிம்சுலைடு மருந்து; மருத்துவர்களுக்கு ஐ.பி.சி. விழிப்புணர்வு!

- Advertisement -

0

நிம்சுலைடு’ வகை மருந்துகளை, 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தருவதற்கு, 13 ஆண்டுகளுக்கு முன் தடை விதிக்கப்பட்டது.ஆனாலும், அந்த மருந்து குழந்தைகளுக்கு தொடர்ந்து பரிந்துரைக்கப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, டாக்டர்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.நிம்சுலைடு என்பது, ஒருவகை வலி நிவாரணி மற்றும் காய்ச்சலை தடுப்பதற்காக பயன்படுத்தப்படும் மருந்து.ஸ்டெராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்தான இது, கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தும் ‘ஹெபாடோடாக்சிஸ்’ என்ற வேதிப்பொருளை உருவாக்குகிறது.இது, குழந்தைகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக கல்லீரல் பாதிப்பு, தோல் தொடர்பான பாதிப்புகளை உருவாக்கும் என, எச்சரிக்கப்பட்டது.

- Advertisement -

இதையடுத்து இந்த மருந்தை, 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தருவதற்கு தடை விதித்து, மத்திய சுகாதார அமைச்சகம், 13 ஆண்டுகளுக்கு முன்பு தடை உத்தரவு பிறப்பித்தது.இந்நிலையில், இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களை கண்காணிக்கும், ஐ.பி.சி., எனப்படும் ‘இந்தியன் பார்மோகோபியா கமிஷனின்’ கீழ் இயங்கும், பி.வி.பி.எச்., எனப்படும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களை கண்காணிக்கும் திட்டத்தின் கீழ், மருந்துகள் தொடர்பான பக்கவிளைவுகள், மருந்துகளால் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்டவை தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.

நிம்சுலைடு மருந்தால் ஏற்பட்ட பக்கவிளைவுகள் தொடர்பாக பல தகவல்கள், பி.வி.பி.எச்.,க்கு கிடைத்துள்ளன. இந்த மருந்து, 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டதும் தெரியாமல், குழந்தை நல டாக்டர்கள் தொடர்ந்து இந்த வகை மருந்தை பரிந்துரைத்து வருவது தெரியவந்துள்ளது.இதற்கு தீர்வு காணும் வகையில், டாக்டர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரசாரம் துவங்கியுள்ளது. இது தொடர்பான போஸ்டர்கள் உள்ளிட்டவை டாக்டர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.இந்த விழிப்புணர்வு இயக்கத்தில், நிம்சுலைடு மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.