திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் சுயநிதி பெண்கள் பிரிவு நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் தேசிய தன்னார்வலர்கள் தினம் கொண்டாடப்பட்டது.
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் சுயநிதி பெண்கள் பிரிவு நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் தேசிய தன்னார்வலர்கள் தினம்
கொண்டாடப்பட்டது.இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஜமால் முகமது கல்லூரி வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் எல். ஆஷித் அஹமது கலந்துகொண்டு“சாதனைப் பெண்கள்” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.அவர்தம் உரையில் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்கள் பற்றியும் அப் பெண்கள் நிகழ்த்திய சாதனைகள் குறித்தும் மாணவியரிடையே எடுத்துரைத்தார்.முன்னதாக பெண்கள் பிரிவு கலைப்புல முதன்மையர் ஏ.மெஹதாப் ஷெரீஃப் தலைமை உரையாற்றினார்.
இந்நிகழ்வில் கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் ஹாஜி டாக்டர் அ.கா. காஜா நஜிமுதீன், பொருளாளர் ஹாஜி எம்.ஜே.ஜமால் முகமது,
உதவிச் செயலாளர் முனைவர் கே. அப்துஸ் சமது, ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் மற்றும் கௌரவ இயக்குநர் முனைவர் கே.என். அப்துல் காதர் நிஹால்,முதல்வர் முனைவர் டி.ஐ. ஜார்ஜ் அமலரத்தினம், துணை முதல்வர் முனைவர் ஆர்.ஜாஹிர் உசேன், கூடுதல் துணை முதல்வர்கள் முனைவர் ஏ. இஷாக் அகமது, முனைவர் ஏ.ஜே. ஹாஜா மொஹிதீன்,செல்வி ஏ பமிதா பானு, விடுதி நிர்வாக இயக்குனர் ஹாஜி முனைவர் கா.ந. முகமது பாசில், பெண்கள் விடுதி இயக்குநர் செல்வி ஜெ. ஹாஜிரா பாத்திமா, பெண்கள் பிரிவு பகுதி 5 ஒருங்கிணைப்பாளர் முனைவர் மு.ஹ.ஹானாரா, நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் ,ஒருங்கிணைப்பாளர்கள் ச.பார்வதிமற்றும் கா. ஹசன் பசரியா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..