தமிழகத்தில் வணிக நிறுவனங்களின் பெயர் பலகையை தமிழில் வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி பெயர் பலகையை தமிழ் மொழியில் வைக்காமல் இருக்கும் வணிக நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி இதற்கு முன்பாக ரூ.50 அபராதம் விதிக்கப்பட்டது.ஆனால் தற்போது ரூ.2000 வரை அபராதம் விதிக்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டது. அத்துடன் தொழிலாளர் நலத்துறை சார்பாக பெயர் பலகையை தமிழில் வைக்காதவர்கள் மீது நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.இந்த வழக்கின் விசாரணையில் தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரி ”அரசு வெளியிட்டுள்ள உத்தரவின் படி வணிக நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும். அவர்கள் வேற மொழிகளை பயன்படுத்த தடை கிடையாது. அதே நேரத்தில் பெயர் பலகையில் தமிழ் எழுத்துக்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்று கூறினார்.