நாம் தமிழர் கட்சியிலிருந்து சமீப காலமாக நிர்வாகிகள் பலரும் விலகி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் விலகுவதாக அறிவித்துள்ளனர். அதன்படி அரூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி தலைவர் இளையராஜா, பொருளாளர் சுரேஷ், துணைச் செயலாளர் வேடியப்பன், இணைச்செயலாளர் முருகேசன், பாப்பிரெட்டி பகுதியைச் சேர்ந்த பொருளாளர் ஜெயக்குமார் ஆகியோர் விலகியுள்ளனர்.கிட்டத்தட்ட 10 பேர் விலகுவதாக அறிவித்துள்ளனர். மேலும் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியிலிருந்து நிர்வாகிகள் விலகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.