திருச்சியில் ரூ.290 கோடி மதிப்பீட்டில் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் உலகத்தரம் வாய்ந்த நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு அரசாணை வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்…
திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்திருந்த நிலையில் தற்போது அதற்கான அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு ஆணையில் “திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருச்சிராப்பள்ளி கிழக்கு வட்டம். செங்குளம் கிராமம், பிளாக்-12, நகரளவை எண்.4 மற்றும் திருச்சிராப்பள்ளி மேற்கு வட்டம், கோ.அபிஷேகபுரம் கிராமம் நகரளவை எண்.60 & 61 என்ற 1.85.17 ஹெக்டேர் இடத்தில் 18333 சதுர மீட்டர் (1,97,337 சதுரடி) (G+7) அளவில் ரூ.235.00 கோடி திட்ட மதிப்பீட்டில் நூலகக் கட்டடம் கட்டுவதற்கு பொதுப் பணித்துறையிடமிருந்து விரிவான திட்ட மதிப்பீடு மற்றும் வரைபடம் பெறப்பட்டுள்ளது .
இந்நூலகத்திற்குத் தேவையான நூல்கள் மற்றும் மின்நூல்கள் ரூ.50.00 கோடி மதிப்பிலும் ஆக மொத்தம் ரூ.290.00 கோடி மதிப்பில் மாபெரும் நூலகம் அமைப்ப தற்கு தமிழ்நாடு நிதிக் குறியீடு விதி.99-ன்படி முன்பணம் பெற்று செலவினம் மேற்கொள்ள நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வழங்குமாறு பொது நூலக இயக்குநர் கோரியிருந்தார். ரூ.290,00,00,000/- திட்ட மதிப்பீட்டில் மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்கலாம் என முடிவு செய்து, நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்தும் அரசு ஆணையிடுகிறது” என பதிவிட்டுள்ளார்.முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பெயரிலான நூலகத்தை திருச்சியில் ரூ.290 கோடி மதிப்பீட்டில் அமைப்பதற்கான நிர்வாக அனுமதியை முதல்வர் வழங்கியதற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் நன்றியும் தெரிவித்துள்ளார்.