திருவெறும்பூர் பகுதியில் நடைபெற்ற குறைதீர் முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…
தமிழ்நாடு துணை முதலமைச்சர் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் 47 வது பிறந்த நாளை விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது .மேலும் இதன் ஒரு பகுதியாக திருச்சி தெற்கு மாவட்டம் , திருவெறும்பூர் பகுதி கழகத்தின் சார்பில் பொதுக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்திற்கு திருவெறும்பூர் பகுதி செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். மேலும் இந்த பொதுக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி,மாநகர செயலாளர் மதிவாணன் மற்றும் திமுக மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி , தலைமை கழக பேச்சாளர் காசிநாதன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன் , மாவட்டத் துணைச் செயலாளர்கள் செங்குட்டுவன் , மூக்கன், லிலாவேலு, துனைமேயர் திவ்யா, பகுதி கழகச் செயலாளர் நீலமேகம், தர்மராஜ், பொதுக்குழு உறுப்பினர் கவுன்சிலர் கே.கே.கே. கார்த்தி மற்றும் நிர்வாகிகள் சோமகுணநிதி, விஜயபாலன், அருண்குமார், கண்ணதாசன் மற்றும் மாவட்ட நகர பகுதி கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்