திருச்சி மாவட்ட வருவாய்த்துறை மூலம் திருவெறும்பூர் தாலுகா அலுவலகத்தில் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடராஜபுரம், அரசங்குடி, கிருஷ்ணசமுத்திரம், வாழவந்தான் கோட்டை, திருநெடுங்குளம் பத்தாள பேட்டை உட்பட ஊராட்சிகளில் உள்ள கிராமப் பகுதியில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் சுமார் 872 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது.நடராஜபுரம் ஊராட்சியில் உள்ள கச்சோந்தி மலை கிராமத்தில் வசிக்கும் சுமார் ஒன்பது பேருக்கும், கலைஞரின் கனவு இல்லம் மூலம் 78 நபர்களுக்கும் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. மேலும் திருச்சி மாநகராட்சி காட்டூர் 43-வது வார்டில் உள்ள கலைஞர் தெரு, திருவள்ளுவர் நகரில் வசிக்கும் சுமார் 100 பேருக்கு இந்த விழாவில் பட்டா வழங்கப்பட்டது.இதே போல் வேளாண் துறை சார்பாக உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், மண்டல குழு தலைவர் மதிவாணன் மாவட்ட கவுன்சிலர் கருணாநிதி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலெட்சுமி, மாவட்ட ஊராட்சிகள்திட்ட இயக்குனர் கங்காதரணி, வருவாய் கோட்டாட்சியர் அருள் திருவெறும்பூர் தாசில்தார் ஜெயபிரகாசம், திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நரசிம்மன் ஸ்ரீதர் மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.